லிப்டில் மாட்டிய ராஜபக்க்ஷ: 25 நிமிடம் திண்டாட்டம்; பெரும் பிரயத்தனப்பட்டு மீட்பு!

0
103

கண்டி மாவட்ட செயலகத்தில் மின்தூக்கியில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக அமைச்சர் ஒருவரும் அவரது பாதுகாவலர்களும் மின்தூக்கியில் 25 நிமிடங்கள் சிக்கித்தவித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான குணதிலக ராஜபக்ஷ மற்றும் அவரது மெய்ப் பாதுகாவலர்கள் இருவர் ஆகியோரே இவ்வாரு மின்தூக்கியினுள் சிக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின் தூக்கியில் மூவரும் கிட்டத்தட்ட 25 நிமிடங்கள் சிக்கிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர் மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பெரும் பிரயத்தனப்பட்டு அவர்களை வெளியே அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகின்றது.  

லிப்டில் மாட்டிக்கொண்ட ராஜபக்க்ஷ ...25 நிமிடம் திண்டாட்டம்; பெரும் பிரயத்தனப்பட்டு மீட்பு! | Rajapak Stuck In The Lift For 25 Minutes