ஐரோப்பாவில் மாடல் உலகில் இப்போது கலக்கி வரும் டாப் அழகி தான் அயிட்டனா லோபஸ். இந்த மாடல் அழகிக்கு அங்கே நாடு முழுக்க ரசிகர் பட்டாளம் உள்ளனர்.
மேலும் இந்த மாடலை இணையத்திலும் நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர். குறித்த மாடல் இன்ஸ்டாகிராமில் 1.41 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.
எனினும் இப்படியொரு மாடல் உண்மையாக இல்லவே இல்லை… இது முழுக்க முழுக்க கணினி AI மாடல் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா… ஆனால் அது தான் உண்மை..
தொழிநுட்பத்தின் மூலம் முழுக்க முழுக்க AI மாடலை வைத்து உருவாக்கப்பட்ட 25 வயதான ஸ்பானிஷ் மாடல் தான் அயிட்டனா லோபஸ்.
இன்ஸ்டாகிராமில் அங்கே பிரபலமான மாடல்களில் ஒருவராக அயிட்டனா லோபஸ் இருந்து வருகிறார். இந்த ஏஐ மாடல் ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 10,000 யூரோ அதாவது சுமார் ரூ. 9 லட்சம் சம்பாதித்தாக தெரியவருகின்றது. மேலும் இந்த மாடலை ரூபன் குரூஸ் என்பவர் தனது தி க்ளூலெஸ் நிறுவனம் மூலம் உருவாக்கியுள்ளார்.