புதைக்கப்பட்ட நபர் மூன்று நாட்களுக்கு பிறகு உயிருடன் வந்ததால் அதிர்ச்சி!

0
171

உயிரிழந்ததாக கூறி அடக்கம் செய்யப்பட்டு மூன்று நாட்கள் கழித்து மீண்டும் உயிருடன் வந்தவரை பார்த்த உறவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் கம்பளையில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கம்பளை பஸ் நிலையத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் மாரடைப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரின் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் இரண்டு மாதங்களாக கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து கம்பளை, மேரிவில வத்த பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட சிலர் வைத்தியசாலைக்குச் சென்று 59 வயதுடைய மகன் லாசர் மைக்கேலின் சடலம் என கூறி குறித்த சடலத்தை அடையாளப்படுத்தியுள்ளார்கள்.

அடக்கம் செய்யப்பட்டவர் மூன்று நாட்கள் பின் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி! | Person Who Was Buried Came Back Alive After

இந்நிலையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் குடும்பத்தினர் மரணச் சடங்குகள் செய்து சடலத்தை அடக்கம் செய்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டு மூன்று நாட்கள் கழித்து உயிரிழந்து விட்டதாகக் கருதப்பட்ட நபர் வீடு திரும்பியுள்ளார்.

வீட்டு வந்த நபரை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தார் சம்பவம் குறித்து அவருக்குத் தெரிவித்ததுடன் மரண விசாரணை அதிகாரி அலுவலகத்திலும் தகவல் வழங்கிய நிலையில் சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.