பிக் பாஸ் 7ம் சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், கமல்ஹாசன் ஒரு குறிப்பிட்ட தரப்புக்கு ஆதரவாக தான் எப்போதும் பேசுகிறார் என விமர்சனங்கள் வருகிறது.
மாயா – பூர்ணிமா கேங்குக்கு அவர் ஆதரவாக பேசுகிறார் என சமூக வலைதளங்களில் கமலை நெட்டிசங்கள் வறுத்தெடுத்த நிலையில் இன்றைய எபிசோடில் முதல் முறையாக கோபமாக பேசி இருக்கிறார்.
விளாசிய கமல்
“இந்த வீட்டில் யாரும் எனக்கு favourite இல்லை. இவர் தோக்கணும், இவர் ஜெயிக்கும் என எனக்கு எதுவும் இல்லை. நான் என்ன விமர்சிக்க வேண்டும் என நீங்க முடிவெடுக்க முடியாது.”
“நான் உங்க கூட விளையாட வரல, முடிந்தால் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த தான் வந்திருக்கிறேன்.”
“யாரும் இங்க பொது நலனுக்காக இல்லை. நான் உட்பட எல்லோரும் சம்பளம் தான் வாங்குகிறோம். அதற்கு கடமைக்கு மரியாதையை ஒழுங்காக செய்யுங்க. நான் என்ன பேசணும் என நீங்க எனக்கு டைலாக் எழுதி கொடுக்காதீங்க” என கமல் போட்டியாளர்களை தாக்கி பேசி இருக்கிறார்.
பூர்ணிமா நேற்றைய எபிசோடில் கமல் பேசிவிட்டு சென்றபின், ‘கேப்டன் பதவியை அதிகார துஷ்ப்ரயோகம் செய்தேன், என்னை மட்டும் திட்டினார், தினேஷ் விஷயத்தை கேட்கவே இல்லையே’ என பூர்ணிமா பேசி இருந்தார். அதை விமர்சித்து தான் கமல் இன்று கோபமாக பேசி இருக்கிறார்.