ஜெயிச்சவன் காலை எங்கே வெச்சா உனக்கென்ன? இதுதான் சனாதனம்; விளாசிய கரு பழனியப்பன்

0
199

கரு பழனியப்பன் பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை, திருவிக நகர் வடக்கு பகுதி திமுக சார்பில், ஓட்டேரியில் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. கதை, திரைக்கதை, வசனம் கலைஞரே என்றைக்கும் சிகரம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் பேசிய இயக்குநர் கரு. பழனியப்பன் எழுத்து, பேச்சு, வசனம் என்று தான் தொட்ட இடங்கள் அத்தனையிலும் ஜொலித்தார் கலைஞர். அதனால்தான் இன்று அவரை பற்றி 100 கூட்டங்களிலும் பேச முடிகிறது.

சனாதனம்

எம்ஜிஆரை விட முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழகத்தில் பெண்கள் ஆதரவு அதிகரித்தே காணப்படுகிறது. இன்னும் எத்தனை ஆட்சி வந்தாலும் மகளிருக்கு இலவச பேருந்து திட்டத்தை ரத்து செய்யவே முடியாது. கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. அவர்கள் பெற்ற உலக கோப்பையின் மீது அந்த விளையாட்டு வீரர் கால் வைத்திருந்தார்.

karu-palaniappan about kalaigner

உடனே நம்ம தேசபக்தர்கள் எல்லாருமே கொந்தளித்து போய்விட்டார்கள். ஜெயிச்சவன் காலை எங்கே வெச்சா உனக்கென்ன? ஒரு கோப்பை மேலே கால் வெச்சதுக்கே இப்படி கதறியே நீ பல காலமாகவே என்னை காலில் பிறந்தவன் என்றுதானே சொல்லிட்டு இருக்கே? மனிதன் காலில் பிறக்கலாமா? ஆக எதை கொண்டாட வேண்டுமோ அதை கொண்டாடாமல் எதை மதிக்க வேண்டுமோ அதை மதிக்காமல் மனிதனை கீழே தள்ளுவதன் பெயர்தான் சனாதனம் எனப் பேசினார்.

இதில் அமைச்சர் சேகர்பாபு முன்னிலை வகித்தார். மேலும் பிரபல நடிகை குட்டி பத்மினி, திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா, கலாநிதி வீராசாமி எம்பி, தாயகம் கவி எம்எல்ஏ, சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.