அஜித், சூர்யா ஓகே தான்; விஜய்யால் ஜோதிகாவுக்கு பாதுக்காப்பு இல்லையா? உண்மை உடைத்த பிரபலம்!

0
144

நடிகை திரிஷா, விசித்ரா போன்ற நடிகைகள் கூறி வந்த நடிகர்களின் சீண்டல்கள் குறித்த செய்திகள் ஒரு பக்கம் இருக்க இது தொடர்பாக நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல் குறித்த தகவல்களும் வீடியோக்களும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

அப்படி நடிகை ஜோதிகா சில ஆண்டுகளுக்கு முன் நடந்த படவிழாவின் போது எல்லா ஹீரோக்களுடனும் நடிக்கும் போது Comfortable-ஆக இருக்காது. ஆனால் எனக்கு சூர்யா, அஜித், மாதவன் போன்ற நடிகர்களுடன் நடிக்கும் போது Comfortable-ஆக இருந்தது என்று கூறியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து பத்திரிக்கையாளர் பிஸ்மி அளித்த பேட்டியொன்றில் ஜோதிகா கூறியது பற்றி சில விசயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் ஜோதிகா கூறியதில் இருந்தே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று தான். இதுவரை எத்தனை நடிகர்களுடன் நடித்திருக்கிறார் என்ற லிஸ்ட்டை எடுத்துக் கொள்ளுங்கள். மூன்று பேரை தவிர ஜோதிகாவுடன் நடித்த நடிகர்கள் அவரிடம் அத்துமீறி தவறாக நடக்க முயன்றார்கள் என்பதை தான் அர்த்தப்படுத்தி பார்க்க முடியும். அப்படி நடிகர் விஜய்யுடன் குஷி படத்தில் நடித்த போது அவரும் குற்றவாளியாக்கப்படுகிறார்.

இதை பிரித்து பார்க்கும் போது விஜய் ரசிகர்கள் நம்மீது கோபப்படுவார்கள். ஆனால் அவர்கள் கோபப்பட வேண்டியது அப்படி சொன்ன ஜோதிகா மீது கோபப்படுங்கள் என்று தெரிவித்துள்ளார். அப்படி ஜோதிகா கூறியதில் ஏதோ ஒன்று நடந்ததை தான் அப்படி சொல்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார் பத்திரிக்கையாளர் பிஸ்மி.

ஏற்கனவே நடிகர் ஷாம், சிம்ரன், ஜோதிகாவுடன் நடித்த போது கூட நடிகர் விஜய் அவர்களை குதிரை என்று வர்ணித்து பேசியது கூட இணையத்தில் வைரலாகி பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.