10வது நாளாக சுரங்கப்பாதையில் உயிருக்கு போராடும் 41 பேர்! (video)

0
198

இந்திய மாநிலம் உத்தரகாண்டில் சுரங்கப்பாதையில் சிக்கிய பணியாளர்களுடன் பேசும் முதல் வீடியோ வெளியாகியுள்ளது. 

சுரங்கப்பாதை 

உத்தரகாண்ட் மாநிலத்தில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா – பர்கோட் இடையே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த சுரங்கப்பாதை 4.5 கிலோ மீற்றர் தொலைவுக்கு அமைப்பட்டு வந்த நிலையில், கடந்த 12ஆம் திகதி திடீர் மண் சரிவு ஏற்பட்டது.

அப்போது பணியாளர்கள் 41 பேர் சுரங்கப்பாதையின் நடுவில் சிக்கினர். அவர்களை மீட்க 8 அரசு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் விரைந்தனர். 

வைரல் வீடியோ 

தற்போது உள்ளே சிக்கிய பணியாளர்களை மீட்கும் பணி 10வது நாளாக நடைபெற்று வருகிறது. சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள பணியாளர்களின் என்னவென்றே தெரியாமல் இருந்தது.

இந்த நிலையில் தான் அவர்களிடம் வாக்கி-டாக்கி மூலம் மீட்புக்குழுவினர் பேசும் முதல் வீடியோ வெளியாகியுள்ளது.

ஆறு அங்குல குழாய் மூலம் கமெரா ஒன்று இடிபாடுகள் வழியாக அனுப்பப்பட்டு வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.   

   

Uttarkhand trapped workers first video