சூப்பர்ஸ்டார்களுடன் விஷ்ணு விஷால்! வைரலாகும் புகைப்படம்

0
187

சூப்பர்ஸ்டார்கள் என உலகநாயகன் மற்றும் அமீர்கான் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தினை நடிகர் விஷ்ணு விஷால் பகிர்ந்துள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் திரைப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து நடித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் கமல்ஹாசன் பிறந்தநாள் விழாவில் நடிகர் விஷ்ணு விஷால் கலந்து கொண்ட நிலையில் உலகநாயகன் மற்றும் அமீர்கான் உடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அந்த புகைப்படத்தினை தனது ட்விட்டரில் பதிவிட்ட விஷ்ணு விஷால் “Superstars are superstars for a reason” என பதிவிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் தற்போது வைரலாக்கியுள்ளனர்.