இலங்கையின் நோயாளர் பராமரிப்பு சேவையினை வலுப்படுத்தும் வகையில் 2,519 புதிய தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.
குறித்த நியமனக் கடிதங்களை இன்று (17.11.2023) பிரதமர் தினேஷ் குணவர்த்தன வழங்கி வைக்கவுள்ளார்.
2018 இல் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட தாதியர் மாணவர் குழுவின் கீழ் 2020 ஜனவரியில் பயிற்சியை ஆரம்பித்து பாடநெறியை வெற்றிகரமாக முடித்த 2519 தாதியர்களுக்கு குறித்த நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.
அதிகரிக்கும் எண்ணிக்கை
தற்போது நாடளாவிய ரீதியில் 42,000 இற்கும் அதிகமான தாதியர்கள் பணிபுரிகின்ற நிலையில் ஆட்சேர்ப்பின் மூலம் நாட்டில் தாதியர்களின் எண்ணிக்கை 45,000ஆக அதிகரிக்கும் என கூறப்படுகிறது.