சுற்றுலா சென்ற ஆங்கிலேய தம்பதி; மனைவியை 41 முறை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்; ஹோட்டல் அறையில் நடந்த கொடூரம்!

0
73

மனவியுடன் சுற்றுலா சென்ற நபர் ஹோட்டல் அறையில் வைத்து மனைவியை கொடூரமாக குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் திருக்கியில் அரங்கேறியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

 சுற்றுலா சென்ற இங்கிலாந்து தம்பதி

சுற்றுலா சென்ற இங்கிலாந்து தம்பதி; 41 முறை மனைவியை குத்தி கொன்ற கணவன்; ஹோட்டல் அறையில் நடந்த கொடூரம்! | Husband Stabs Wife 41 Times To Death Turkey

இங்கிலாந்தில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு சுற்றுலா சென்ற ஒரு தம்பதியினர் நேற்று முன்தினம் (நவம்பர் 14) பாத்திஹ் மேவ்லனாகாபி மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தனர்.

அங்கு இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கணவன், தனது மனைவியை ஸ்க்ரூடிரைவரால் 41 முறை குத்தி கொடூரமாக கொன்றுள்ளார்.

சுற்றுலா சென்ற இங்கிலாந்து தம்பதி; 41 முறை மனைவியை குத்தி கொன்ற கணவன்; ஹோட்டல் அறையில் நடந்த கொடூரம்! | Husband Stabs Wife 41 Times To Death Turkey

ஹோட்டல் அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டதால் ஊழியர் அறைக்கு சென்று பார்த்தபொழுது ரத்த வெள்ளத்தில் பெண் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மற்றும் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து அந்த பெண் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பெண்ணின் தொண்டை மற்றும் உடல் முழுவதும் சிதைவுகள் காணப்பட்டதை வைத்து அவர் ஸ்க்ரூடிரைவர் மூலம் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவர் தெரிவித்தார்.

ஹோட்டல் அறையில் நடந்த கொடூரம்

கொலை தொடர்பாக ரத்தக் கறைபடிந்த டி-சர்ட் அணிந்தபடி ஓட்டலில் இருந்து தப்பிக்க முயன்ற கணவனை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் அவர் தன் மனைவியை கொன்றதை ஒப்புக் கொண்டார்.

மனைவி தனக்கு போதைப்பொருள் கொடுத்தபின் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தனக்கு உளவியல் பிரச்சனைகள் இருப்பதால் மருந்துகள் பயன்படுத்துவதாகவும் கணவன் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பொலிஸார் அறையில் சோதனை செய்தபோது எந்த ஒரு போதைப் பொருளுக்கான தடயமும் கிடைக்கவில்லை என கூறப்படும் நிலையில் சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.