இந்தியப் படையை வெளியேற்றுவோம்: மாலத்தீவு அதிபரின் அறிவிப்பால் பரபரப்பு

0
60

மாலத்தீவில் இருந்து இந்திய படையை வெளியேற்றுவோம் என அந்நாட்டின் புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள முகமது மூயிஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய துருப்புக்களுக்கு பதிலாக சீனாவையோ அல்லது வேறு எந்த நாட்டின் படையையோ மாலத்தீவுக்குள் அனுமதிக்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாலத்தீவில் இருந்து இந்திய படையை வெளியேற்றுவோம்: அதிபரின் அறிவிப்பால் பரபரப்பு | We Will Withdraw Indian Forces From Maldives

மாலத்தீவில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் சீனாவுக்கு சார்பானவர் என தெரிவிக்கப்படும் முகமது மூயிஸ் என்பவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவராக கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் அவர் சீனாவின் ஆதரவாளராக இருந்தாலும் சீன படையையும் தன்னுடைய நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். அவர் மாலத்தீவில் உள்ள இந்திய படையை வெளியேற்றுவோம் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.