கனடா பிரதமரை உணவு விடுதியில் வைத்து சுற்றிவளைத்த பாலஸ்தீன ஆதரவாளர்கள்

0
182

கனடாவின் வான்குவரில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பொலிஸார் பாதுகாப்பாக அழைத்துச்சென்றுள்ளனர்.

உணவுவிடுதியொன்றில் பிரதமர் காணப்பட்டவேளை அந்த பகுதியை சுமார் 250க்கும் மேற்பட்ட பாலஸ்தீன ஆதரவாளர்கள் சுற்றிவளைத்துள்ளனர்.

சைனாடவுனில் இது இடம்பெற்றதாகவும் இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக 250க்கும் அதிகமான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உணவு விடுதியில் கனடா பிரதமரை சுற்றிவளைத்த பாலஸ்தீன ஆதரவாளர்கள் | Palestinian Canadian Prime Minister Restaurant

பாலஸ்தீன கொடிகளுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் யுத்தநிறுத்தம் என கோசம் எழுப்புவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.