இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கர்கள்; 2.9 லட்சம் மக்கள் கூடி பிரம்மாண்ட பேரணி

0
172

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் வாஷிங்டனில் கிட்டத்தட்ட 2.9 லட்சம் பேர் கூடி பேரணியில் ஈடுபட்டனர்.

பிரம்மாண்ட பேரணி

இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் ஒரு மாதத்தை தாண்டி நடைபெற்று வருகிறது. இதில் 12,000க்கும் மேற்பட்டோர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்.

போர் நிறுத்தத்திற்கு உலக நாடுகள் தொடர்ந்து கோரிக்கையை முன்வைத்து வரும் நிலையில், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக அழிக்கும் வரை போர் நிறுத்தத்திற்கு வழியே வாய்ப்பு இல்லை என இஸ்ரேல் மறுத்து வருகிறது.

29-lakh-israeli-supporters-rally-in-the-us-whasington சுமார் 2.9 லட்சம் மக்கள் கூடி பிரம்மாண்ட பேரணி: இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கர்கள்

இந்நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் இஸ்ரேலுக்கு ஆதரவாக கிட்டத்தட்ட 2.9 லட்சம் பேர் கூடி பிரம்மாண்டமான பேரணியை நடத்தினர்.

கல்லூரி மாணவ-மாணவிகள் பெரும் திரளாக கலந்து கொண்ட இந்த பேரணியில் பணய கைதிகளுக்கு ஆதரவாக வாசகங்கள் அடங்கிய ஆடைகளை அணிந்து இருந்தனர்.

இஸ்ரேலிய அதிபர் பேச்சு

இந்த பேரணியில் லைவ் வீடியோ வழியே கலந்து கொண்டு பேசிய இஸ்ரேலிய அதிபர் ஈசாக் ஹெர்ஜாக், ஹமாஸ் அமைப்பினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளுக்காக பேரணி நடத்த இவர்கள் ஒருங்கிணைந்து உள்ளனர்.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் உலக நாடுகளில் உள்ள அனைத்து யூதர்களும் பெருமையுடனும் மற்றும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கான உரிமைக்காக பேரணி நடைபெறுகிறது என பேசினார்.