பிக் பாஸ் இதுவரை
நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஐஷு வெளியேறினார். இவருடைய எலிமினேஷன் பிக் பாஸ் வீட்டிலிருக்கும் சிலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. குறிப்பாக நிக்சன் கதறி கதறி அழுதார். சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும்.
இந்த வாரம் பிக் பாஸ் 7ல் கேப்டனாக தினேஷ் பதிவு ஏற்றுள்ளார். இதனால் கண்டிப்பாக இந்த வாரம் சுவாரஸ்யமாக இருக்கும் என ரசிகர்கள் எண்ணினார்கள். ஸ்மால் பாஸ் வீட்டிற்கு யார்யாரையெல்லாம் தினேஷ் அனுப்பப்போகிறார் என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துகொண்டு இருந்தனர்.
ஆனால், இந்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு யாரும் செல்லப்போவதில்லை என பிக் பாஸ் அறிவித்துவிட்டார். யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்றும் கூறினார். இதனால் இந்த வாரம் பிக் பாஸ் – ஸ்மால் பாஸ் என்ற பிரிவு இல்லை.
புதிய நபர்கள்
இந்நிலையில், இன்று ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடில் அனைவருக்கும் புதிதாக இரண்டு நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் வேறு யாருமில்லை நடிகர் புகழ் மற்றும் நடிகை ஸ்ருஷ்டி தான்.
ஆம், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நம்மை வயிறு குலுங்க சிரிக்க இந்த புகழ், ஸ்ருஷ்டி தான் பிக் பாஸ் 7ல் என்ட்ரி கொடுத்துள்ளனர். இவர்கள் இருவரும் போட்டியாளர்களாக வந்துள்ளார்களா என தெரியவில்லை.
ஏற்கனவே 5 பேர் வைல்டு கார்டு போட்டியாளர்களாக வந்துள்ளனர். ஆகையால் இவர்கள் இருவரும் நிகழ்ச்சியை சிறப்பிக்க விருந்தினர்களாக மட்டுமே உள்ளே வருகை தந்து இருப்பார்கள் என கூறப்படுகிறது.
ப்ரோமோ வீடியோ..