தமிழீழ கோரிக்கையை புறக்கணிக்கும் இந்தியா; சமூக செயற்பாட்டாளர் செல்வின் தெரிவிப்பு

0
166

இலங்கை என்பது ஒரு தனி தீவாக இருக்க வேண்டும் எனவும், அதை தழிழர்களுக்கு பிரித்துக்கொடுப்பதற்கு சர்வதேசம் ஒருபோதும் விருப்பம் காட்டுவதில்லை எனவும் சமூக செயற்பாட்டாளர் செல்வின் சுட்டிக்காட்டினார்.

வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் நீண்டகால தனிநாடு கோரிக்கைக்கு இந்தியாவினதும், சர்வதேசத்தினதும் நிலைப்பாடு தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த விடயங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கை அரசாங்கத்தோடு எவ்வாறு ஒத்துப்போவது, அரசின் நிலைப்பாடுகளை எவ்வாறு ஆதரிப்பது போன்ற செயற்பாடுகளில் சர்வதேசம் கூடிய கவனம் செலுத்துகிறது.

இதன்மூலம் இலங்கை அரசை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் என்பதை சர்வதேசம் தெளிவாக புரிந்துள்ளது.

இதன் பின்னணியிலேயே இந்தியாவும் இதற்கு முழுமையான ஆதரவை தமிழ் மக்களுக்கு அப்பாற்பட்டு இலங்கை அரசிற்கு வழங்குகிறது.

இதுவே சர்வதேசத்தினதும், இந்தியாவினதும் பூகோள அரசியலாக காணப்படுகிறது.” என்றார்.