மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு அழைத்த விஜய் டிவி… தரமான பதிலடி கொடுத்த பிரதீப்!

0
144

பிரபல தென்னிந்திய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர் பிரதீப் வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பிக்பாஸ் சீசன் 7 துவங்கியதில் இருந்து பிரதீப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்து வந்தது.

இதை பொறுத்து கொள்ள முடியாத சக போட்டியாளர்கள் அவரை இலக்கு வைத்து பல விடயங்களை அவருக்கு எதிராக செய்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு டாஸ்கின் போது கூல் சுரேஷ் – பிரதீப் இருவருக்கு இடையில் மிக பெரும் மோதல் வெடித்தது.

மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு அழைத்த விஜய் டிவி... தரமான பதிலடி கொடுத்த பிரதீப்! | Pradeep Anthony Bigg Boss Show Kamal Haasan

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

இதனால் மற்ற போட்டியாளர்களும் பிரதீப் மீது கடும் அதிருப்தி அடைந்தனர். எனவே இந்த வாரம் கமல் சாரிடம் இது தொடர்பில் உரிமை குரல் எழுப்புவதாக மாயா மற்றும் புர்ணிமா என சில போட்டியாளர்கள் முடிவு செய்தனர்.

இதனையடுத்து கடந்த வாரம் சனிக்கிழமை கமல்ஹாசன் வந்தபோது, கூல் சுரேஷ் பிரச்சனையை பேசாமல் பிரதீப்பால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்து வேறு ஒரு புதிய பிரச்சனையை கிளப்பி விட்டார்கள்.

இந்நிலையில் இதுவரை பிரதீப் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் அப்படி என்ன நடந்து கொண்டார் என்பதை ஒரு மணி நேர நிகழ்ச்சியிலோ 24 மணி நேர லைவ் நிகழ்ச்சியிலோ காண்பிக்கப்படவில்லை.  

மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு அழைத்த விஜய் டிவி... தரமான பதிலடி கொடுத்த பிரதீப்! | Pradeep Anthony Bigg Boss Show Kamal Haasan

பிரதீப் ரெட் கார்டு

இவ்வாறான நிலையில் பிரதீப் இருந்தால் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி ரெட் கார்டு கொடுத்து அவரை வெளியேறிவிட்டனர். இச் செயல் பார்வையாளர்களால் ஏற்க முடியவில்லை. இந்த விடயத்தில் கமல்ஹாசன் கூட யோசிக்காமல் செய்துவிட்டார் என்பதே பலரின் கருத்தாக தற்போது இருந்து வருகிறது. 

மேலும், பிரதீப் வெளியேறியதற்கு மாயா&கோ தான் முக்கிய காரணம் என்றாலும் கமல் இந்த விடயத்தை தீர விசாரிக்காமல் செயல்பட்டுவிட்டார் என்பதே பலரின் வாதமாக இருந்து வருகிறது. 

மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு அழைத்த விஜய் டிவி... தரமான பதிலடி கொடுத்த பிரதீப்! | Pradeep Anthony Bigg Boss Show Kamal Haasan

கமல்ஹாசனுக்கு எதிராக கடுமையான விமர்சனம்

இதேவேளை, கமல்ஹாசனுக்கு எதிராக கடுமையான விமர்சனமும் எழுந்துள்ளது. இதனால் கமல்ஹாசன் இதற்கு சுமுகமான ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று இருப்பதாக சமூக வலைதளங்களில் சில தகவல்கள் வெளிவருகின்றன.

எனவே இந்த வார இறுதியில் இந்த பிரச்சனையை பற்றி கமல்ஹாசன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் பிரதீப்பை அழைப்பதற்கான வேலையும் நடந்து வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன.

மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு அழைத்த விஜய் டிவி... தரமான பதிலடி கொடுத்த பிரதீப்! | Pradeep Anthony Bigg Boss Show Kamal Haasan

பிரதீப்பிடம் விஜய் தொலைக்காட்சியினர் தொடர்பு கொண்டு மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வருமாறு பேசிய பொழுது இந்த வீட்டிற்கு கண்டிப்பாக நான் வரவே மாட்டேன் என தெரிவித்தாகவும் தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளிவருகின்றன இருப்பினும் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இந்த வார இறுதியில் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரிந்துவிடும்.