இலங்கை தமிழர் இனப்படுகொலையை உலகம் இன்றுவரை ஏற்றுக்கொள்ளவில்லை; பாலஸ்தீனிய பத்திரிகையாளர் சீற்றம்!

0
143

இலங்கையில் 2009 இல் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் இன்றுவரை அவர்களின் துயரத்தினை சர்வதேசசமூகம் அங்கீகரிக்கவில்லை என தெரிவித்துள்ள பாலஸ்தீன பத்திரிகையாளர் ஹெப் ஜமாஸ், ஏன் இனப்படுகொலை என்ற வகைப்படுத்தலிற்குள் கூட தமிழர்கள் கொல்லப்பட்டமை சேர்க்கப்படவில்லை என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் பதிவிட்டுள்ளதாகவது,

பாலஸ்தீனியர்கள் இனப்படுகொலை தனித்துவமானது இல்லை என்பதை தற்போது அதிகளவிற்கு நான் உணர்கின்றேன். எந்த வகையிலும் நாங்கள் விசேடமானவர்கள் இல்லை.

நாங்கள் சுதந்திரத்தை தவிர வேறு எதனையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்

இலங்கையில் கடந்த 2009 இல் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் . இன்றுவரை அவர்களின் துயரத்தினை சர்வதேசசமூகம் அங்கீகரிக்கவில்லை ஏன் இனப்படுகொலை என்ற வகைப்படுத்தலிற்குள் கூட அது சேர்க்கப்படவில்லை. சீற்றம் மட்டும்போதாது என்பதை வரலாறு எமக்கு கற்றுத்தந்துள்ளது.

தமிழர் இனப்படுகொலையை உலகம் இன்றுவரை ஏற்றுக்கொள்ளவில்லை; பாலஸ்தீனிய பத்திரிகையாளர் சீற்றம்! | World Has Not Accepted Tamil Genocide Till Date

அனுதாபம் மாத்திரம் போதாது. எங்கள் மக்கள் உலகம் முழுவதும் படுகொலைகளை எதிர்கொள்கின்றனர். உண்மை என்னவென்றால் பெரும்பான்மையான மக்கள் இனப்படுகொலையை இடைநிறுத்துவதற்காக தங்கள் வாழ்க்கையை சில நிமிடங்கள் இடைநிறுத்திக்கொள்ளமாட்டார்கள் .

நாங்கள் மிகவும் வசதியாக இருக்கின்றோம் என நான் நினைக்கின்றேன். ஆயினும் நான் கைவிடமாட்டேன் – இந்த யதார்த்த்தை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றேன்.

பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டாலும் பாலஸ்தீன மக்கள் தப்பிப்பிழைப்பார்கள் – நாங்கள் சுதந்திரத்தை தவிர வேறு எதனையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

தமிழர் இனப்படுகொலையை உலகம் இன்றுவரை ஏற்றுக்கொள்ளவில்லை; பாலஸ்தீனிய பத்திரிகையாளர் சீற்றம்! | World Has Not Accepted Tamil Genocide Till Date

எங்கள் வாழ்நாளில் அதனை பார்க்க முடியாமல்போனால் கூட அதனை தவிர வேறு எதனையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

ஜேர்மன் அரசாங்கம் இராணுவஉதவியாக நவம்பர் 2ம் திகதி 300 மில்லியன் யூரோக்களை அனுப்பஇணங்கியுள்ளது.2022 இல் இது 32 மில்லியனாக காணப்பட்டது.

பாலஸ்தீனியர்களின்படுகொலையை மேலும் அதிகரிக்க கடந்த ஆண்டு வழங்கிய தொகையை விட தற்போது அதிக தொகையை வழங்குகின்றதாக தெரிவித்த பாலஸ்தீனி பத்திரிகையாளர் ஹெப் ஜமாஸ், எங்கள் குடும்பங்கள் அனைத்தும் இறந்துவிடும் அல்லவா? எனவும் பதிவிட்டுள்ளார்.