இந்திய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பருக்கு ஒத்திவைப்பு

0
89

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தின் 3ஆவது வாரத்தில் தொடங்கி 20 அமர்வுகள் நடைபெறும்.

இந்த ஆண்டு 5 மாநில தேர்தல் காரணமாக டிசம்பர் மாதத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது. இதற்கிடையே நடப்பு ஆண்டிற்கான பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4ஆம் திகதி தொடங்கி 22 ஆம் திகதி வரை 19 நாட்கள் நடைபெற உள்ளது என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.