காசாவிலிருந்து வெளியேறிய பிரித்தானிய குடும்பங்களுக்கு புதிய சவால்..

0
146

இஸ்ரேல் காசா போருக்கிடையே, காசாவிலிருக்கும் வெளிநாட்டவர்கள் மற்றும் படுகாயமடைந்த பாலஸ்தீனர்கள், ரஃபா என்னுமிடத்திலுள்ள எல்லை வழியாக வெளியேற கடந்த வெள்ளிக்கிழமை வரை அனுமதியளிக்கப்பட்டது.

வார இறுதியில், அதாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள், எல்லை மூடப்பட்டிருந்தது.

ஆகவே, இன்னும் பல பிரித்தானியர்கள் காசாவிலிருக்கிறார்கள்.

வெளியேறியவர்களுக்கு ஒரு புதிய பிரச்சினை 

காசாவிலிருப்பவர்கள், எப்போது தாங்கள் காசாவிலிருந்து வெளியேறுவோம் என்று கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், காசாவிலிருந்து வெளியேறிய சிலர், ஒரு புதிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ளார்கள்.

அதாவது, பிரித்தானியர்கள் முதலான வெளிநாட்டவர்கள் காசாவிலிருந்து வெளியேறினாலும், அவர்கள் இன்னமும் பிரித்தானியாவுக்கு வந்து சேரவில்லை. அவர்கள் இப்போது எகிப்து நாட்டில் இருக்கிறார்கள்.

எகிப்திலிருந்து வெளியேற, பிரித்தானியர்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. பிரச்சினை என்னவென்றால், பிரித்தானிய குடியுரிமை பெற்று காசாவிலில் வாழ்ந்துவந்த சிலர், காசாவிலுள்ள பிரித்தானியர்கள் அல்லாதவர்களை திருமணம் செய்துள்ளார்கள்.

பிரித்தானிய குடியுரிமை பெற்றவர்கள் உடனடியாக எகிப்திலிருந்து வெளியேறிவிடலாம். ஆனால் பிரித்தானிய குடிமக்களல்லாத அவர்களுடைய குடும்பத்தினர் பிரித்தானியா வரவேண்டுமானால், அவர்களுக்கு பிரித்தானியா விசா வழங்கவேண்டும்!

மூன்றே நாட்கள்தான்…  

ஆனால், பிரித்தானிய குடிமக்களின் குடும்பத்தினருக்கு, அதாவது பிரித்தானிய குடிமக்கள் அல்லாத குடும்பத்தினருக்கு விசா வழங்க, குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் வரை ஆகும்.

ஆனால், மூன்று நாட்களுக்குள் அவர்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறியாக வேண்டும், இல்லையென்றால், அவர்கள் எகிப்தில் தங்கியிருக்கும் நாட்களுக்கு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும்,நாட்கள் அதிகரிக்க, அதிகரிக்க, அபராதமும் அதிகரித்துக்கொண்டே போகும்.

new challenge for british families fleeing gaza

இதற்கிடையில், காசாவிலிருந்து வெளியேறிய பிரித்தானியர்களின் பிரித்தானியர்களல்லாத குடும்பத்தினரை பிரித்தானியாவுக்கு வரவழைப்பதற்காக, அவர்களுக்கு விசா வழங்குவதை விரைவாக்க பிரித்தானிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆனால், நிச்சயம் அது மூன்று நாட்களில் சாத்தியம் அல்ல! ஆகவே, காசாவிலிருந்து வெளியேறி எகிப்திலிருக்கும் தங்கள் பிரித்தானியர்களல்லாத குடும்பத்தினரை எண்ணி, பிரித்தானியர்களாகிய அவர்களது உறவினர்கள் கவலையடைந்துள்ளார்கள்.