30 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக முதலாவது பிறந்தநாளை கொண்டாடிய இரட்டையர்கள்!

0
173

அமெரிக்காவில் உறைந்த கருவில் இருந்து பிறந்த இரட்டையர்கள் தங்கள் முதல் பிறந்தநாளை கொண்டாடினர். 

கின்னஸ் உலக சாதனை

வாஷிங்டனின் வான்கூவரில் தேசிய கரு தான மையத்திற்கு (NEDC) தானம் கொடுக்கப்பட்ட அண்ணன் மற்றும் சகோதரியின் கருக்கள் ஒரு தம்பதியினரால் தத்தெடுக்கப்பட்டன.

1992ஆம் ஆண்டு முதல் உறைய வைக்கப்பட்ட இந்த கருக்களை வளர்ப்பு பெற்றோர் 2022ஆம் ஆண்டில் IVF முறையைப் பயன்படுத்தி இரட்டைக் குழந்தைகளாக பெற்றெடுத்தனர்.  

அப்போதே கின்னஸ் உலக சாதனையில் இது இடம்பெற்றது. இந்த நிலையில் இரட்டைக் குழந்தைகளான திமோத்தி மற்றும் லிடியா ரிட்ஜ்வே தங்கள் முதல் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். 

முதல் பிறந்தநாள்

அவர்களின் பெற்றோருடன் இந்த வார தொடக்கத்தில் இரட்டையர்கள் தங்கள் முதல் பிறந்தநாளை சொக்லேட் கேக் மற்றும் பலூன்களுடன் கொண்டாடினர். 

முன்னதாக குழந்தைகளின் தந்தையான ரிட்ஜ்வே பேசுகையில், ‘கடவுள் நமக்கு கொடுக்க விரும்பும் பல குழந்தைகளை பெறுவோம் என்று நாங்கள் எப்போதும் நினைப்போம். கடவுளின் விருப்பமாக இருந்தால் நாங்கள் இன்னும் முடிக்கவில்லை என்று நினைத்தோம்’ என்றார். 

Embryos frozen babies, Washington

அதேபோல் அவரது மனைவியும், ‘அவர்கள் வாழ்வதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர்களாக உணர்ந்தோம்’ என தெரிவித்தார்.