சுவையான சீஸ் கார்ன் பிரெட் டோஸ்ட்..

0
221

கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் வந்து விட்டது. இப்போது அப்போ அப்போ சமைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

சுட சுட மொறு மொறுவென்று ஒரு ரெசிபி மாட்டி விட்டால் சத்தமில்லாமல் அனைத்தையும் சாப்பிட்டு முடித்து விட்டு மறுமுறை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

அத்துடன் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் அவர்களை சாப்பிட வைப்பதற்கு கொஞ்சம் உணவை அலங்காரம் செய்ய வேண்டிய தேவை இருக்கும்.

ஆனால் காலையில் கொடுக்கும் உணவில் அதிகப்படியான ஆரோக்கியமும் இருக்க வேண்டும்.

இவ்வளவு தேவைகளையும் நிவர்த்தி செய்யும் ரெசிபியொன்றை தொடர்ந்து நாம் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

ரிச்சான ஸ்டைலில் சீஸ் கார்ன் பிரெட் டோஸ்ட் செய்வது எப்படி? | Rich Cheese Cornbread Toast Recipe In Tamil
  • பிரெட் துண்டுகள்- 10
  • சுவீட் கார்ன் -ஒரு கப் (வேகவைத்தது)
  • சீஸ்- ஒரு கப் (துருவியது)
  • சில்லிபிலேக்ஸ்- ஒரு ஸ்பூன்
  • சீசனிங்- ஒரு ஸ்பூன்
  • மிளகுத்தூள் – ஒரு ஸ்பூன்
  • கொத்தமல்லி தலை- ஒரு கப்பிடி
  • டொமேட்டோ சாஸ்- தேவையான அளவு
  • மயோனிஸ்- தேவையான அளவு

ரெசிபி

முதலில் தேவையான அளவு பிரெட்டை எடுத்து அதன் ஓரங்களை நீக்கிவிட்டு அதனை வட்ட மூடிகளை கொண்டு வட்டமான வடிவில் வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

வெட்டிய துண்டுகளை ஒரு தட்டி வைத்து கொள்ள வேண்டும்.

ரிச்சான ஸ்டைலில் சீஸ் கார்ன் பிரெட் டோஸ்ட் செய்வது எப்படி? | Rich Cheese Cornbread Toast Recipe In Tamil

பின்னர் ஒரு பாத்திரத்தில், துருவிய சீஸ், வேகவைத்த கார்ன், சில்லிபிளேக்ஸ், சீசனிங், மிளகுத்தூள், கொத்தமல்லி தலைகள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இது ஒரு புறம் இருக்கையில், பிரெட் துண்டுகளுக்கு மேல் டொமேட்டோ சாஸ் தடவ வேண்டும். அதற்கு மேல் மயோனிஸ் தடவ வேண்டும். அதற்கு அடுத்தப்படியாக கலந்து வைத்திருக்கும் சீஸ் கலவையை மேல் வைக்கவும்.

பிரெட்டை மூடி வைத்து விட்டு தோசை கல்லை அடுப்பில் வைத்து பிரெட்டை வைத்து 10 நிமிடங்கள் சூடு வரும் வரை மூடி வைக்கவும்.

10 நிமிடங்களுக்கு பின்னர் திறந்து பார்த்தால் சுவையான சூடான ரிச்சான சீஸ் கார்ன் பிரெட் டோஸ்ட் தயார்!