பாரிஸில் ஹிஜாப் அணிந்து மிரட்டல் விடுத்த பெண் சுட்டு சிறைபிடிப்பு!

0
135

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மெட்ரோ ரயிலின் சுரங்கப்பாதையை வெடி வைத்துத் தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்த ஹிஜாப் அணிந்த பெண்ணை போலீசார் சுட்டு சிறைப்பிடித்தனர். எனினும் பெண்ணை சோதனையிட்டதில் வெடிகுண்டு போன்ற எந்தவித ஆயுதங்களும் அவரிடம் இல்லை.

உடலில் குண்டுகள் துளைத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்மணி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறையின் எச்சரிக்கையை மீறி அந்தப் பெண் நீங்கள் எல்லோரும் சாகப் போகிறீர்கள் என்று மிரட்டல் விடுத்ததால் பெண்ணை சுட்டதாக போலீசார் தெரிவித்தனர்.