நான் நிச்சயமாக நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாவேன்; ஜனக ரத்நாயக்க சபதம்

0
155

நாட்டில் நிலவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வுகளை வழங்க தயாராக உள்ளேன். அதற்காக ஜனாதிபதி பதவியை எதிர்பார்த்துள்ளேன் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கியுள்ள விசேட நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

”நிச்சயம் ஜனாதிபதியாக வருவேன் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. நான் ஜனாதிபதி ஆவதை எவராலும் தடுக்க முடியாது. அதற்கு மதத் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் ஆசீர்வாதம் ஏற்கனவே கிடைத்துள்ளது.”என்றும் அவர் கூறியுள்ளார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஜனக ரத்நாயக்க கடந்த மே மாதம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின் பின்னர் நீக்கப்பட்டார்.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் எடுத்த தீர்மானம் தொடர்பில் அரசாங்க அமைச்சர்களுக்கும், ஜனக ரத்நாயக்கவுக்கும் இடையில் பல சந்தர்ப்பங்களில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. அதன் காரணமாக அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.