ரத்தம் தெறிக்க தீப்பொறி பறக்க வெளியான சூர்யாவின் அடுத்த பட தலைப்பு

0
166

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும் நடிகர் சூர்யாவின் 43வது படத்தின் தலைப்பினை காணொளியுடன் படக்குழு வெளியிட்டுள்ளது.

ரத்தம் தெறிக்க.. தீப்பொறி பறக்க.. சூர்யா தோன்றும் இந்த காணொளி ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்தாக அமைந்துள்ளது. படத்தின் தலைப்பில் பாதியை மறைந்து ‘புறநானூறு’ என தெரியும்படி பெயரை அறிவித்துள்ளனர்.

மேலும், இந்த படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.