இஸ்ரேல் – ஹமாஸ் போர் முடிவில்லாமல் நீண்டுவரும் நிலையில், போருக்கு நடுவில் பிரதமர் நெதன்யாகுவின் மகன் யாயிர் நெதன்யாகு அமெரிக்கா கடற்கரையில் உல்லாசமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
போரில் மக்கள் செத்துமடிய பிரதமர் மகன் அதைப்பற்றி கவலைப்படாது உல்லாசமாக இருப்பது தொடர்பில் இஸ்ரேலிய ஊடகங்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
அமெரிக்கா கடற்கரையில் உல்லாசம்
கடந்த 7 ஆம் திகதி ஆரம்பமான இஸ்ரேல் – ஹமாஸ் குழு போரில் இஸ்ரேலின் தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் உட்பட்ட 7000 ஆயிரத்திற்கும் அதிமாஅனோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், உலக நாடுகள் போரை நிறுத்துமாறு வலியுறுத்திவரும் நிலையில், , இஸ்ரேலின் பிரதமர் மகன் குறித்த தகவல் இஸ்ரேல் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும், அவரின் மூன்றாவது மனைவி சாராவுக்கும் பிறந்த மகன் யாயிர் (32). அவர் இஸ்ரேலில் இல்லாமல் அமெரிக்காவில் உல்லாசமாகப் பொழுதைக் கழித்துக்கொண்டிருக்கிறார் என்று மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
அமெரிக்காவின் மியாமி கடற்கரையில் அவர் இருக்கும் புகைப்படத்தைத் தனது வலைதளப் பக்கத்தில் பகிர்ந்ததின் மூலம் இந்தச் செய்தி வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
அதேவேளை இஸ்ரேலில் கட்டாய ராணுவ சேவை உள்ள நிலையில், இராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பலரும் தற்போது நடைபெற்றுவரும் போருக்காக நாடு திரும்பி, ராணுவத்தில் இணைந்துவருகின்றனர்.
அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் நெதன்யாகுவின் மகன்
இவ்வாறான நிலையில், இவர் மட்டும் போரின்போது நாட்டில் இல்லாமல் உல்லாசமாக இருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் கடுமையாக விமர்சித்துவருகின்றன. அதேவேளை அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்ளும் யாயிர் நெதன்யாகு 2018-ல் ‘அனைத்து இஸ்லாமியர்களும் வெளியேறும் வரை இஸ்ரேலில் அமைதி இருக்காது’ என்று கருத்து பதிவிட்டு கடும் கண்டனத்துக்கு உள்ளானார்.
அதன் பிறகு, “இஸ்ரேலின் பிரதமரும், என் தந்தையுமான பெஞ்சமின் நெதன்யாகு, ஒரு தொழிலதிபருக்கு உதவுவதற்காக 20 பில்லியன் டாலர் எரிவாயு ஒப்பந்தத்தில் முறைகேடு செய்தார்” என வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இஸ்ரேல் எதிர்க்கட்சித் தலைவர் பென்னி காண்ட்ஸ் ஒரு பெண்ணுடன் உறவில் இருப்பதாகத் தகவலை வெளியிட்டு அதிர்ச்சி கிளப்பினார்.
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் யாயிருக்கு 34,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து இஸ்ரேலுக்காகப் போரில் ஈடுபட்டிருக்கும் தன்னார்வலர் ஒருவர் கூறுகையில்,
“யுத்தக் களத்தில் நாங்கள் இருக்கும்போது யாயிர், மியாமி கடற்கரையில் உல்லாசம் அனுபவித்துவருகிறார். இஸ்ரேலின் இந்த நிலைக்குக் காரணமானவர்கள் நாங்கள் அல்ல. ஆனாலும், நாங்கள் குடும்பம், வேலை என அனைத்தையும் விட்டுப் போரில் ஈடுபட்டுவருகிறோம். ஆனால் அவர் என விமர்சனம் செய்துள்ளார்.