அன்றாடம் நாம் உண்ணும் உணவில் பெரும்பாலும் பச்சை நிற காய்கறிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மற்ற நிறங்களுக்குப் பெரிதாக கொடுப்பதில்லை.
ஆனால் சிவப்பு நிற காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடுவதால் உடலில் நிறைய ஆரோக்கியமான மாற்றங்கள் உண்டாகும்.
நம்முடைய அன்றாட உணவில் எல்லா வகையான ஊட்டச்சத்துக்களும் (வைட்டமின்கள், மினரல்கள்) கிடைக்கும் படி சரிவிகித உணவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
நாம் அன்றாடம் குறைந்தது ஒரு பழமாவது உண்பது சிறந்த உணவுப் பழக்க முறை ஆகும்.
சிவப்பு நிற பழங்கள்
சிவப்பு நிறத்தில் இருக்கும் பழங்களில் பெரு்பாலானவை இனிப்பு சுவையுடன் நன்கு மொறுமொறு க்ரன்ச்சியாகவும் இருக்கும்.
பெரும்பாலான சிவப்பு நிறத்தில் உள்ள பழங்களில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகளும் அதிகமாக இருக்கும். நீர்ச்சத்து நிறைந்தவையாகவும் இருக்கும்.
இதய ஆரோக்கியம்
சிவப்பு நிற பழங்களில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் ரத்த அழுத்தத்தின் அளவைக் குறைத்து கார்டியோ வாஸ்குலர் நோய்கள் வராமல் தடுத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தச் செய்கின்றன.
அதோடு ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதைத் தடுப்பது மற்றும் கெட்ட கொலஸ்டிரால் (எல்டிஎல்- LDL) அளவைக் குறைக்க உதவி செய்யும்.
கண்பார்வையை மேம்படுத்தும்
சிவப்பு நிற காய்கறிகள் மற்றும் பழங்களில் வைட்டமின் ஏ அதிகமாக இருக்கிறது. குறிப்பாக இந்த சிவப்பு நிற பழங்கள் மற்றும் காய்கறிகளில் கரோட்டினாய்டுகள் கண் பார்வையை மேம்படுத்த உதவி செய்யும்.
குறிப்பாக வயதாகும் போது ஏற்படுகிற பார்வை கோளாறுகளைச் சரிசெய்ய உதவும்.
ஆரோக்கியமான சருமம்
அடர் சிவப்பு நிறத்தில் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ள ஆற்றல் வாய்ந்த ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தச் செய்யும்.
குறிப்பாக சூரியக் கதிர்வீச்சால் ஏற்படுகிற புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தைக் குறைத்து சருமத்தை மென்மையாகவும் பொலிவாகவும் வைத்திருக்கச் செய்யும்.
ஆன்டி – .இன்ஃபிளமேட்டரி பண்புகள் சிவப்பு நிற பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஆன்டி – இன்ஃபிளமேட்டரி பண்புகள் அதிகமாக இருக்கின்றன.
இந்த ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் உடலில் ஏற்படும் இன்ஃபிளமேஷன்கள் மற்றும் உடல் வலியைக் குறைக்கச் செய்யும்.
எடை கட்டுப்பாடு
சிவப்பு நிறத்தில் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்களில் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
நார்ச்சத்துக்கள் மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகளைத் தவிர்த்து, ஜீரண ஆற்றலை மேம்படுத்தும்.
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்து உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவி செய்யும்.