சுவிஸ் இளம்பெண்ணை இந்தியாவுக்கு வரவழைத்துக் கொன்ற நபர்..

0
192

சுவிஸ் நாட்டு இளம்பெண் ஒருவரை இந்தியாவுக்கு வரவழைத்துக் கொலை செய்த இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் பெணக்ளைக் கடத்தும் கடத்தல் கும்பல் ஒன்றுடன் தொடர்புடையவராக இருப்பார் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அழகிய இளம்பெண்

இந்தியாவின் டெல்லியிலுள்ள திலக் நகர் என்னுமிடத்தில் கார் ஒன்றிற்குள் வெளிநாட்டவரான அழகிய இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

விசாரணையில், அவரது பெயர் நினா பெர்கெர் (Nina Berger, 30) என்பதும், அவர் சுவிஸ் நாட்டவர் என்பதும் தெரியவந்தது.

அவரை குர்பிரீத் சிங் என்னும் இந்தியர் இந்தியாவுக்கு வரவழைத்து கொலை செய்தது தெரியவந்ததைத் தொடர்ந்து அவரைக் கைது செய்த பொலிசார், அவரது மொபைல் போன், அவரது வீடு ஆகியவற்றை சோதனை செய்ததில், அவர்களுக்கு வேறொரு சந்தேகம் உருவாகியுள்ளது.

பொலிசாருக்கு உருவாகியுள்ள சந்தேகம்

அதாவது, குர்பிரீத்தின் மொபைலில் வெளிநாட்டுப் பெண்கள் பலரது புகைப்படங்களும், அவர்களுடைய தொடர்பு எண்களும் கிடைத்துள்ளன. மேலும், அவரது வீட்டை சோதனையிட்டபோது, அவரது வீட்டில் ரொக்கமாக இரண்டு கோடி ரூபாய் கிடைத்துள்ளதுடன், அவரது வங்கிக்கணக்கில் பெரும் தொகை இருப்பதும் தெரியவந்துள்ளது.

அத்துடன், மூன்று துப்பாக்கிகள், குண்டுகள், 12 சிம் கார்டுகள், 4 மொபைல் போன்கள் ஆகியவையும் கிடைத்துள்ளன. 

சுவிஸ் இளம்பெண்ணை இந்தியாவுக்கு வரவழைத்துக் கொன்ற நபர்: மொபைலில் உள்ள புகைப்படங்களால் சந்தேகம் | Delhi Cops Probe Human Trafficking Angle

குர்பிரீத் பயன்படுத்தும் கார், பாலியல் தொழில் செய்யும் ஒரு பெண்ணின் ஆதார் கார்டை பயன்படுத்தி வாங்கப்பட்டுள்ளது. எனவே, குர்பிரீத், பாலியல் தொழிலுக்காக பெண்களைக் கடத்தும் கும்பலுடன் தொடர்புடையவராக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், கொல்லப்பட்ட நினாவின் உடலிலுள்ள காயங்கள், அவர் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஆக, வெளிநாட்டுப் பெண்களைக் கடத்துவதில் தனக்கு உதவும்படி நினாவை குர்பிரீத் வற்புறுத்தியிருக்கலாம் என்றும், நினா அதற்கு மறுத்ததால் அவரை குர்பிரீத் கொலை செய்திருக்கலாம் என்றும் பொலிசார் கருதுகிறார்கள்.