டொலரின் பெறுமதியில் பாரிய மாற்றம்!

0
130

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்றையதினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 319 ரூபாய் 29 சதமாக பதிவாகியுள்ளது.

நேற்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபாய் 92 சதமாக காணப்பட்டது.

மேலும், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 329 ரூபாய் 81 சதமாக பதிவாகியுள்ளது.

நேற்று, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 329 ரூபாய் 54 சதமாக காணப்பட்டது.