ஜெர்மனியில் யூத வழிபாட்டு தலத்திற்குள் வெடிகுண்டை வீசிய மர்ம நபர்கள்!

0
220

ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகர் மையத்தில் யூத வழிபாட்டு தலத்திற்குள் மர்மநபர்கள் சிலர் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து வெடிக்கும் தன்மை உடைய வேதிப்பொருட்களை வீசிவிட்டு தப்பியோடினர். இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஜெர்மனியில் யூத வழிபாட்டு தலத்திற்குள் வெடிகுண்டை வீசிய மர்மநபர்கள்! | Suspects Threw Bomb Berlin Synagogue Attacked

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் ஆலயத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதேவேளை தப்பியோடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் காரணமாக வழிபாட்டு தலத்தை சுற்றி வசித்து வருபவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளார். இந்த வழிப்பாட்டு தலம் சார்பில் பாடசாலை – கல்லூரிகள், தங்கும் விடுதிகள் ஆகியவை அங்கு நிர்வகிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனியில் யூத வழிபாட்டு தலத்திற்குள் வெடிகுண்டை வீசிய மர்மநபர்கள்! | Suspects Threw Bomb Berlin Synagogue Attacked