அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் ஜோர்தான் மாநாடு இரத்து

0
142

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் எகிப்து மற்றும் பலஸ்தீன தலைவர்களுடன் காஸா பகுதி தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜோர்தானில் நடைபெறவிருந்த மாநாடு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி ஜோர்தான் மன்னர் அப்துல்லா மாநாட்டை இரத்து செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. காஸா பகுதியிலுள்ள அல்-அஹில் வைத்தியசாலை மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 500 பேர் வரை உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மன்னர் அப்துல்லாவின் ஆதரவுடன் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் மற்றும் எகிப்து அதிபர் அல் சிசி ஆகியோரை ஜோர்டானில் சந்தித்து இஸ்ரேல் ஹமாஸ் நெருக்கடி குறித்து விவாதித்தார்.

எவ்வாறாயினும் ஜனாதிபதி இஸ்ரேலுக்கு மாத்திரம் விஜயம் செய்யவுள்ளதாகவும் ஜோர்டான் பயணத்தை ஒத்தி வைக்கவுள்ளதாகவும் வெள்ளை மாளிகையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோர்டான் மன்னர் அப்துல்லாவின் நான்கு வழி மாநாட்டை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அங்கு மனிதாபிமான பேரழிவுகளைத் தடுக்க காசாவுக்கு மனிதாபிமான உதவி தேவை மற்றும் இஸ்ரேலுடன் நடந்து வரும் மோதலைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் ஆகியவை முதன்மையான விவாதங்களாக இருந்தன.

ஆனால், காஸாவில் உள்ள மருத்துவமனையில் சுமார் 500 பாலஸ்தீனியர்களை கொன்று குவித்ததற்கு இஸ்ரேல்தான் காரணம் என மன்னர் அப்துல்லா குற்றம் சாட்டியதுடன் இது மனித குலத்திற்கே அவமானம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி காஸா பகுதியில் இராணுவ தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலை மன்னர் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.