2023 ஆம் ஆண்டுக்கான ஐசிசி உலக கிண்ணப் தொடரின் லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை நெதர்லாந்து 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – நெதர்லாந்து அணிகள் தர்மசாலாவில் மோதின.
மழை காரணமாக தாமதமாக தொடங்கிய ஆட்டம் 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 43 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 245 ஓட்டங்களை பெற்றது.
தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் பந்து வீச்சில் லுங்கி என்கிடி, மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்கள்.
நெதர்லாந்து அணி சார்பில் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் அதிகப்பட்ச 78 ஓட்டங்களைப் பெற்றார். இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணி 246 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது.
நெதர்லாந்து அணியின் அசத்தலான பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்க அணி 42.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 207 ஓட்டங்கை மட்டுமே பெற்றது.
தென் ஆப்பிரிக்க அணி சார்பில் டேவிட் மில்லர் அதிகூடிய ஓட்டங்களாக 43 ஓட்டங்களை பெற்றார். நெதர்லாந்து அணி சார்பில் பந்து வீச்சில் லோகன் வான் பீக், 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இன்றையை போட்டியை மழை குறுக்கிட்ட காரணத்தால் போட்டி 43 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.