விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் குடும்பத்துடன் வீரகாவியமாகிவிட்டார் அவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்த வேண்டாம் என யேர்மன் வாழ் ஊடகவியலாளர் சாந்தி நேசக்கரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், குறிப்பிட்ட சில நபர்கள் தலைவருடைய வீரமரணத்தை மறைத்து மக்களை ஒன்றிணைப்பதற்காக அவர் இருக்கிறார் என்னும் கதையை கட்டவிழ்த்து விட்டிருந்தனர். அந்த அடிப்படையிலேயே மக்கள் அதை நம்பினார்கள்
இந்த நிலையில், காசி ஆனந்தன் அண்மையில் துவாரகா இருப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அவர் சொல்வது போல் துவாரகா உயிருடன் இருந்தால் அவரை மக்கள் முன் கொண்டு வாருங்கள் அவரை மக்கள் நம்பி ஏற்றுக்கொள்ளட்டும்.
ஆனால் இல்லாத துவாரகாவை இருப்பதாக நம்ப வைக்கிறது என்பது எங்களுடைய இனத்திற்கு காசி ஆனந்தன் செய்யும் மிகப்பெரிய துரோகமாகவே நாம் பார்க்க வேண்டும். என்றார்.