8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 15 வயது சிறுவன்..

0
151

புத்தளம் – ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 15 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவனை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பங்கதெனிய – கொட்டபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் தரம் 8 இல் கல்வி கற்கும் இந்த சிறுவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக, சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மருத்துவ பரிசோதனை

முறைப்பாட்டிற்கமைய, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

15 வயது சிறுவனால் 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி: பெற்றோர்களே அவதானம் | The Fate Of The Girl Sri Lanka Police

வன்கொடுமைக்கு உள்ளானதாக கூறப்படும் சிறுமி, மருத்துவ பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சிறுவனை சிலாபம் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.