யாரெல்லாம் மாதுளம் பழம் சாப்பிட கூடாது..!

0
413

பொதுவாகவே அனைவராலும் விரும்பப்படும் ஒரு பழம் தான் மாதுளம் பழம். இதன் நிறம் மற்றும் சுவை காரணமாக உலகளவில் அனைவராலும் விரும்பப்படுகின்றது.

மாதுளம் பழத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஏறாளமான சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது.

இவ்வாறு அலப்பரிய நன்மைகளை மாதுளம் பழம் கொண்டிருந்தாலும் அதில் பலரும் அறிந்திராத பல பக்க விளைவுகளும் காணப்படுகின்றது.

மாதுளம் பழம் யாரெல்லாம் சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்ளளவேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மாதுளம் பழத்தின் பக்க விளைவுகள்

மாதுளம் பலத்தால் ஏற்படும் அலர்ஜிகள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை. இது அரிப்பு, வீக்கம், தொண்டையில் எரிச்சல்,சுவாசிப்பதில் சிரமம், காதுகளில் வீக்கம், படை நோய் மற்றும் மூச்சுத் திணறல் ஆகிய பிரச்சினையுடையவர்களுக்கு பாதக  விளைவை ஏற்படுத்தும். 

மாதுளை சாப்பிட்ட10 நிமிடத்தில் அரிப்பு தொடங்கினால் மருத்துவரை அணுகுவது நல்லது. சில மருந்துக்களை எடுக்கும் போது மாதுளம்பழத்தை தவிர்ப்பது நல்லது.

யாரெல்லாம் மாதுளம் பழம் சாப்பிட கூடாது? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Pomegranate Side Effects In Tamil

அமிட்ரிப்டைலைன் (எலவில்)

  • டெசிபிரமைன் (நோர்பிராமின்)
  • ஃப்ளூக்ஸெடின் (புரோசாக்)
  • ஒன்டான்செட்ரான் (ஜோஃப்ரான்)
  • டிராமடோல் (அல்ட்ராம்)
  • ரோசுவாஸ்டாடின் (க்ரெஸ்டர்)

மேற்குறிப்பிடப்பட்டுள்ள  மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் மாதுளம் பழத்தை சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

யாரெல்லாம் மாதுளம் பழம் சாப்பிட கூடாது? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Pomegranate Side Effects In Tamil

குறிப்பாக மன அழுத்தத்திற்கு மருந்து எடுத்துக்கொள்பவர்கள் மற்றும் போதை பொருள் பாவனையில் இருந்து விடுப்பட சிகிச்சை பெற்று வருபவர்கள் மாதுளம் பழத்தை சாப்பிட கூடாது. இது குறித்த மருந்துக்களுடன் மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

தாழ் இரத்த அழுத்த மருந்துகள் சாப்பிடுபவர்கள் மாதுளை எடுத்துக்கொள்ளும் முன் மருத்துவரை அணுகுதல் வேண்டும். மாதுளம் பழத்தில் இரத்த அழுத்தை குறைக்கும் தன்மை இயற்கையாகவே காணப்படுகின்றது. 

யாரெல்லாம் மாதுளம் பழம் சாப்பிட கூடாது? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Pomegranate Side Effects In Tamil

நீங்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தால் அதற்கு இரண்டு வாரத்திற்கு முன்பிருந்து மாதுளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

கர்ப்பினி பெண்களுக்கு குழந்தை வளர வளர வயிற்றுப்பகுதியில் தோல்விரிவடைவதால் அரிப்பு ஏற்படுகின்றது இந்த அரிப்பை மாதுளம் பழம் மேலும் ஊக்குவிக்கின்றது எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் கர்ப்பினி பெண்கள் மாதுளம் பழத்தை தவிர்த்துக்கொள்வது நல்லது. 

யாரெல்லாம் மாதுளம் பழம் சாப்பிட கூடாது? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Pomegranate Side Effects In Tamil

கலோரி அதிகரிப்புக்கு  சிறந்த மருந்தாகக்காணப்படும் இதுஎடை குறைப்பில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். இந்த பக்க விளைவுகள் அனைத்தும் தனிநபர் நோயெதிர்ப்பு சக்தியை பொறுத்தது என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.