மூன்று நாட்களுக்கு முன்பே எச்சரித்த எகிப்து! குறைத்து மதிப்பிட்ட இஸ்ரேல்

0
226

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்த கூடும் என்று மூன்று நாட்களுக்கு முன்பே இஸ்ரேலுக்கு எகிப்து உளவுத்துறை தகவலை பகிர்ந்து இருந்தது.

இருப்பினும் இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

மூன்று நாட்களுக்கு முன்பே எச்சரித்த எகிப்து! குறைத்து மதிப்பிட்ட இஸ்ரேல் | Egypt Warned Israel Three Days In Advance Attack

எல்லை பகுதியிலும் புகுந்து அந்த பகுதியில் இருந்த மக்களை தாக்கியதில் பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். குறித்த தாக்குதலை அடுத்து இஸ்ரேலுக்கு பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 

மூன்று நாட்களுக்கு முன்பே எச்சரித்த எகிப்து! குறைத்து மதிப்பிட்ட இஸ்ரேல் | Egypt Warned Israel Three Days In Advance Attack

இவ்வாறான நிலையில், ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலுக்கு 3 நாட்களுக்கு முன்பே இஸ்ரேலுக்கு எகிப்து எச்சரிக்கை விடுத்தது. உளவு தகவலை பகிர்ந்து இருந்தது என கூறப்படுகிறது.

அடுத்து வரவிருக்கிற நிலைமையை பற்றி இஸ்ரேலை எச்சரித்தோம் என எகிப்து கூறியுள்ளது. இஸ்ரேல் பிரதமருக்கு நேரடியாக உளவு தகவல் அனுப்பி வைக்கப்பட்டது.

மூன்று நாட்களுக்கு முன்பே எச்சரித்த எகிப்து! குறைத்து மதிப்பிட்ட இஸ்ரேல் | Egypt Warned Israel Three Days In Advance Attack

ஆனால் காசா அச்சுறுத்தலை இஸ்ரேல் குறைத்து மதிப்பிட்டு விட்டது என எகிப்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. இருப்பினும் உளவு தகவல்களை எகிப்து அளித்தது பற்றிய விசயங்களை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.

எனினும் ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலை பற்றிய உளவு தகவல்களை எகிப்து பகிர்ந்தது என இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதிப்படுத்தியுள்ளது.