ஐக்கிய அரபு வழங்கும் கோல்டன் விசா; விண்ணப்பிப்பது எப்படி…

0
142

ஐக்கிய அரபு அமீரகம், முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் கோல்டன் விசாக்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி 20 லட்சம் திர்ஹாம்களுக்கு மேல் சொத்து வைத்திருப்பவர்கள் கோல்டன் விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

5 அல்லது 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்

இந்த கோல்டன் விசாக்கள் தொழில் அதிபர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள், திறமையான மாணவ மாணவிகள் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த கோல்டன் விசா புதுப்பிக்கத்தக்க குடியிருப்பு விசா ஆகும். மேலும் இந்த விசா 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த கோல்டன் விசாவிற்கு ஸ்பொன்சர் தேவையில்லை. இந்த கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் தங்கள் விசா செல்லுபடியாகாமல் 6 மாதங்களுக்கும் மேலாக அமீரகத்துக்கு வெளியே தங்க முடியும். இதுபோன்ற பல சிறப்புகளை கொண்டுள்ளது இந்த கோல்டன் விசா.

கோல்டன் விசா பெற விரும்புபவர்கள்

சொத்து அடிப்படையில் கோல்டன் விசா பெற விரும்புபவர்கள் முதலில் துபாய் நிலத் துறை (DLD) மூலம் தங்களின் சொத்து மதிப்பீடு செய்யப்பட விண்ணப்பிக்க வேண்டும். DLD-ன் ரியல் எஸ்டேட் சேவைகள், அறங்காவலர் அலுவலகங்கள் அல்லது Dubai REST செயலி மூலம் விண்ணப்பிப்பதன் மூலம் இந்த பணியை தொடங்கலாம்.

வெளிநாடு ஒன்று வழங்கும் கோல்டன் விசா : விண்ணப்பிப்பது எப்படி...! | Foreign Golden Visa How To Apply

மேலும் சொத்து மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்த பிறகு, கோரப்பட்ட தேவையான ஆவணங்களை விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த மதிப்பீட்டு கட்டணமாக 4000 திர்ஹாம்கள் செலுத்த வேண்டும். இதனை கிரெடிட் கார்டுகள், பணம், இபே உள்ளிட்டவற்றின் மூலம் செலுத்தலாம்.

மதிப்பீடு முடிந்த பிறகு அதற்கான சான்றிதழ், மின்னஞ்சல் மூலம் விண்ணப்பதாரருக்கு அனுப்பப்படும். சொத்து மதிப்பீட்டு சான்றிதழ் பெற 1 முதல் 8 வேலை நாட்கள் ஆகும்.

இவை அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின்னர் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு விண்ணப்பதாரருக்கு கோல்டன் விசா வழங்கப்படும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொத்துக்களின் கூட்டு மதிப்பு 20 லட்சம் திர்ஹாம்களுக்கு மேல் இருந்தாலும் கோல்டன் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.