அபுதாபி D10 லீக் போட்டித் தொடரில் இலங்கை வீரர்கள்

0
226

நவம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள அபுதாபி டீ-10 லீக் போட்டித் தொடருக்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 14 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

எட்டு அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டித் தொடரானது நவம்பர் 28ஆம் திகதி முதல் டிசம்பர் ஒன்பதாம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி சார்பில் எஞ்சலோ மெத்தியூஸ், குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, மதீஷ பத்திரண, தீக்சன, வனிந்து ஹசரங்க, சாமிக்க கருண ரத்ன, லஹிரு குமாரஇ துனித் வெல்லாலகே, டில்ஷான் மதுஷங்க, நுவன் துஷாரா மற்றும் லசித் குரூஸ்புள்ளே ஆகியோர் இப்போட்டித் தொடருக்கு தொரிவாகியுள்ளனர்