இஸ்ரேல் போர் தொடர்பில் சர்ச்சையை ஏற்படுத்திய நடிகையின் மியா கலிபா கருத்து

0
231

முன்னாள் நடிகையான மியா கலிபா இஸ்ரேல் போர் குறித்துக் கூறிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் கடந்த சனிக்கிழமை எதிர்பார்க்காத வகையில் மோசமான தாக்குதலை நடத்தியிருந்தனர்.

குறிப்பாக `வெறும் 20 நிமிடத்தில் சரமாரியாக 5000 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதோடு இஸ்ரேலுக்குள்ள நுழைந்த ஹமாஸ் படையினர் பொதுமக்கள் மீதும் தாக்குதல்` நடத்தியிருந்தனர்.

இஸ்ரேல் போர் தொடர்பில் சர்ச்சையை ஏற்படுத்திய நடிகையின் கருத்து | The Actres Comment For Israel War

இதற்கிடையே 30 வயதான மியா கலிபா தனது எக்ஸ் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் இரண்டு டுவிட்களை தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் முதல் டுவிட்டில் “பாலஸ்தீனியர்கள் இத்தனை காலம் அடைந்த துன்பத்தைப் பார்த்தும் நீங்கள் பாலஸ்தீன ஆதரவாக இருக்கவில்லை என்றால் நீங்கள் இந்த விவகாரத்தில் தவறான இடத்தில் நிற்கிறார்கள் என்று அர்த்தம்.

வரலாறு உங்களுக்குப் பாடத்தைச் சொல்லித் தரும்” என்று பதிவிட்டுள்ளார். அதேபோல மற்றொரு ட்வீட்டில் அவர், “பாலஸ்தீனத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களிடம் யாராவது அவர்கள் படும் துயரத்தை ரெக்காட் செய்யச் சொல்ல முடியுமா” எனப் பதிவிட்டிருந்தார்.

இஸ்ரேல் போர் தொடர்பில் சர்ச்சையை ஏற்படுத்திய நடிகையின் கருத்து | The Actres Comment For Israel War

இந்நிலையில் மியா கலிபா தெரிவித்த கருத்துக்கள் உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மியா கலிபாவின் இந்த நடவடிக்கை காரணமாக அவருடன் போட்டியிருந்த வணிக ஒப்பந்தங்களை உடனடியாக இரத்து செய்வதாகக் கனடாவின் பிரபல வானொலி தொகுப்பாளர் டோட் ஷாபிரோ அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “மியா கலிபா செய்த செயலை ஏற்கவே முடியாது. அவருடன் போட்ட ஒப்பந்தத்தை இரத்து செய்கிறோம். நீங்கள் செய்தது அருவருப்பானது.

இஸ்ரேல் போர் தொடர்பில் சர்ச்சையை ஏற்படுத்திய நடிகையின் கருத்து | The Actres Comment For Israel War

தயவு செய்து சிறந்த மனிதனாக மாறுங்கள். கொலை, பலாத்காரம், பிணையக் கைதிகளாக அப்பாவிகளைப் பிடித்துச் செல்வதை நீங்கள் ஏற்பது உண்மையிலேயே மோசமானது. உங்கள் செயலை கண்டிக்க வார்த்தைகளே இல்லை.

உங்கள் அறியாமையைக் கண்டு வியக்கிறேன்” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். அதேபோல அமெரிக்காவின் பிரபல அடல்ட் மெகசினான ப்ளே பாய் நிறுவனமும் மியா கலிபாவுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் இரத்து செய்வதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.