அனிகா சுரேந்திரனின் சொத்து மதிப்பு தெரியுமா!

0
176

குட்டி நயன்தாராவாக இளசுகளின் மனதை கட்டிப்போட்ட அனிகாவின் சொத்து மதிப்பு தொடர்பான தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

சினிமா பயணம்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகியாக வலம் வருபவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன்.

இவர் அஜித் நடிப்பில் வெளியான “ என்னை அறிந்தால்” திரைப்படத்தில் அஜித்தின் அன்பு மகளாக நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து மீண்டும் அஜித் – அனிகா இணைந்து “ விசுவாசம்” என்ற திரைப்படம் நடித்துள்ளார்கள்.

இந்த படத்தில் நயன் அம்மாவாக நடித்திருப்பார். நடிகை நயன்தாராவின் முக ஜாடை அனிகாவிற்கு இருப்பதால் இவரை ரசிகர்கள் “ குட்டி நயன்தாரா..” என செல்லப் பெயர் கொண்டு அழைத்து வருகிறார்கள்.

சொத்து மதிப்பு

இந்த நிலையில் அண்மைக்காலமாக தமிழ் சினிமா பிரபலங்களின் சொத்து மதிப்பு தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றது.

அந்த வகையில் குட்டி நயன்தாராவாக கோலிவுட் ரசிகர்களை தன்வசப்படுத்திய அனிகாவின் சொத்து மதிப்பு 16 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.

“ தமிழ் சினிமாவிற்குள் குழந்தை நட்சத்திரமாக இருக்கும் அனிகாவின்சொத்து மதிப்பு இவ்வளவு தானா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.