பிரபல சிங்கள நடிகர் ஜெக்சன் ஆண்டனி காலமானார்

0
173

பிரபல சிங்கள நடிகர் ஜெக்சன் ஆண்டனி காலமானார். விபத்தொன்றில் படுகாயமடைந்த அவர் கடந்த 14 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்தார்.

இந்த நிலையிலே அவர் இன்று அதிகாலை காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 1958 ஆம் ஆண்டு இறாகமையில் பிறந்த அவர் தமது 65 ஆவது வயதில் காலமாகியுள்ளார். ஜெக்சன் எண்டனி தமிழர்கள் மத்தியிலும் பரீட்ச்சியமான ஒரு சிறந்த கலைஞராக விளங்கியவர்.

நடிகர், பாடலாசிரியர், பாடகர், எழுத்தாளர், அறிவிப்பாளர் என தமது திறமைகளை வெளிப்படுத்திய அவர் நாட்டின் சிறந்த பத்திரிகையாளராகவும் கருதப்படுகிறார்.