ஜப்பானியர்கள் ஏன் அதிக நாட்கள் வாழ்கின்றார்கள் தெரியுமா..!

0
248

உலகெங்கிலும் உள்ள மக்களின் ஆயுட்காலம் என்று வரும்போது, ​​நாடுகளின் பட்டியலில் ஜப்பான் மூன்றாவது இடத்தில் உள்ளது. 

ஜப்பானைச் சேர்ந்த கேன் தனகா, 118 வயதுடைய உலகின் வயதான நபராக இருந்தார். 

ஜப்பான் சனத்தொகையில் 1450 பேருக்கு ஒருவர் 100 வயதுக்கு மேல் வாழ்கின்றார் என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது ஏன் ஜப்பானியர்களின் ஆயுள் காலம் அதிகமாகவுள்ளது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

நீண்ட காலம் வாழ்வதற்கு…

அவர்கள் நீண்ட காலம் வாழ்வதற்கும் மற்றவர்களிடமிருந்து அவர்களை வேறுபடுத்துவதற்கும் சில வாழ்க்கை முறை பழக்கங்கள் காரணமாக அமைகிறது.

ஜப்பானியர்கள் ஏன் அதிக நாட்கள் வாழ்கின்றார்கள் தெரியுமா? ரகசியத்தை தெரிஞ்சிக்கோங்க

குறிப்பாக காய்கறிகளின் அதிக பயன்பாடு காய்கறிகளின் அதிக நுகர்வு கடல் உணவு மற்றும் இறைச்சி ஜப்பானிய உணவு வகைகளில் குறிப்பிடத்தக்க பகுதியாக காணப்படுகின்றமை மற்றும் உடற்பயிற்சி போன்றன முக்கிய காரணங்களாக அமைகின்றது. 

காய்கறிகள் மீதான அவர்களின் நாட்டம் அவர்களின் நல்ல ஆரோக்கியத்திற்கு துணைப்புரிகின்றது.

மேலும்  கராத்தே, கெண்டோ, ஜூடோ மற்றும் அக்கிடோ போன்ற தற்காப்புக் கலைகளின் பிறப்பிடமாக இருக்கும் ஒரு நாட்டில் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து சொல்லவா வேண்டும்? இதுவும் இவர்களின் நீண்ட ஆயுளுக்கு காரணமாக திகழ்கின்றது. 

ஜப்பானியர்கள் ஏன் அதிக நாட்கள் வாழ்கின்றார்கள் தெரியுமா? ரகசியத்தை தெரிஞ்சிக்கோங்க

ஜப்பானியர்கள் அவர்களின் உணவுடன் அதிகமான கடல் உணவுகளை சேர்த்து கொள்கிறார்கள்.

அத்துடன் பச்சையான காய்கறிகள் பாதி வேக வைத்து எடுத்த இறைச்சிகளை தான் அதிகமாக சாப்பிடுகிறார்கள். இது தான் அவர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

ஜப்பானியர்கள் ஏன் அதிக நாட்கள் வாழ்கின்றார்கள் தெரியுமா? ரகசியத்தை தெரிஞ்சிக்கோங்க

 உடற்பயிற்சி என ஜப்பானியர்கள் தனியாக எதையும் செய்வதில்லை. மாறாக தற்காப்புக்கலை, வெளிச் செயற்பாடுகள், சிறந்த வாழ்க்கை முறை, மன மகிழ்ச்சி, புதிய புதிய கண்டுபிடிப்புக்கள், நடனம் போன்ற பாரம்பரிய கலைகள் ஆகியவற்றில் அதிகமான நாட்டம் காட்டுவார்கள்.  இதுவே அவர்களின் நீண்ட ஆயுளுக்கு காரணமாக  அமைகின்றுது.