அம்பாறையில் பெறாமகளின் திடீர் மரணச் செய்தியினால் துக்கம் தாங்காத சிறிய தாயும் உயிரிழந்த சோகச் சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது.
அம்பாறை அக்கரைப்பற்றில் நேற்று (03) இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசித்துவந்த சுந்தரலிங்கம் கமலா எனும் 59 வயதான நான்கு பிள்ளைகளின் தாயாரே கடந்த 01ஆம் திகதி திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மரணச்செய்தி அறிந்து வீட்டுக்குச் சென்ற 85 வயதுடைய அவரின் சிறிய தாயார் அருளப்பு தங்கம்மா துக்கம் தாளாமல் மயக்கமடைந்த நிலையில் அக்கரைப்புற்று ஆதார வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
தீவிர சிகிச்சை
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் அவர் நேற்று முன்தினம் (02) மாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெறாமகள் சிறுவயது முதல் சிறிய தாயாரே வளர்ந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் மகளின் மரணச் செய்தியின் தாக்கம் காரணமாக மறுகணமே சிறிய தாயாரும் உயிரிழந்தமை அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை உயிரிழந்த இருவரது உடலங்களும் மயானத்தில் அருகருகே புதைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.