சகல கட்டுப்பாடுகளும் அடுத்தவாரம் தளர்வு; வெளியான அறிவிப்பு!

0
213

அடுத்த வாரம் முதல் தனியார் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதிகள் மீதான சகல கட்டுப்பாடுகளையும் தளர்த்த எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே நிதி இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

விரைவில் தேவையான உத்தரவுகள்

அத்துடன் இது தொடர்பில் , தேவையான உத்தரவுகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் காரணமாக இலங்கை சுங்கத்தின் வருமானம் வெகுவாக குறைந்துள்ளது என்றும் , இது சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் ஏற்றுமதியை பாதித்துள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

சகல கட்டுப்பாடுகளும் அடுத்தவாரம் தளர்வு; வெளியான அறிவிப்பு! | All Restrictions Eased Next Week Announcement

எனவே இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்த உதவும் என அரசாங்கம் நம்புவதாகவும் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.