உளவுத்துறை அதிகாரியை கடித்த அதிபர் ஜோ பைடனின் செல்ல நாய்!

0
253

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் 2 வயது செல்ல நாய் அந்நாட்டின் உளவு பிரிவு அதிகாரி ஒருவரை கடித்து வைத்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவியேற்றதும் அவருடைய செல்ல நாய் மேஜர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டது.

அது அப்போது வெள்ளை மாளிகையின் அதிகாரி ஒருவரை கடித்துவிட்டது என கூறப்பட்டது. ஆனால் அதுபற்றிய கூடுதல் விவரங்கள் எதனை பற்றியும் உளவு பிரிவு அதிகாரிகளோ அல்லது வெள்ளை மாளிகையோ வெளியிடவில்லை.

உளவு பிரிவு அதிகாரி ஒருவரை கடித்து வைத்த அதிபர் ஜோ பைடனின் செல்ல நாய்! | Joe Biden S Pet Dog Bit An Intelligence Officer Us

இவ்வாறான நிலையில் பைடன் வளர்த்து வரும் கமாண்டர் என்ற ஜெர்மன் ஷெப்பர்டு வகையை சேர்ந்த 2 வயது செல்ல நாய் உளவு பிரிவு அதிகாரி ஒருவரை கடித்துள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு ஒக்டோபரில் இருந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதில், 10 முறை அதிகாரிகளை கடித்து வைத்து அல்லது தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதுபோன்றதொரு சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியிருந்தது.

இந்த நிலையில், 11-வது சம்பவம் நடந்துள்ளது. அந்த அதிகாரிக்கு வெள்ளை மாளிகை வளாக பகுதியிலேயே வைத்து மருத்துவ அதிகாரிகள் சிகிச்சை அளித்துள்ளனர். இதனையடுத்து அவர் நன்றாக உள்ளார் என செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

உளவு பிரிவு அதிகாரி ஒருவரை கடித்து வைத்த அதிபர் ஜோ பைடனின் செல்ல நாய்! | Joe Biden S Pet Dog Bit An Intelligence Officer Us