போராட்டகாரர்களை சந்தித்த முதல் ஜனாதிபதி பைடன்

0
190

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் வேலைநிறுத்தம் செய்யும் ஊழியர்களை அதிபர் ஜோ பைடன் சந்தித்துப் பேசியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் டிரம்ப்புக்கு (Donald Trump) எதிராக உடல் உழைப்புத் தொழிலாளர்களின் ஆதரவைப் பெறும் நோக்கில் பைடன் அவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் வாகன உற்பத்தித் தொழிற்சாலைகள் நிறைந்த மாநிலம் மிச்சிகன். அதிபர் தேர்தலில் அந்த மாநிலம் முக்கியமான போட்டிக்களமாகத் திகழும். டிரம்ப் மிச்சிகன் மாநிலத்துக்குச் செல்வதற்குச் சில மணிநேரத்துக்கு முன் பைடன் ஊழியர்களைச் சந்தித்துள்ளார்.

Biden meet with protesters

இம்மாதம் 15ஆம் தேதி தொடங்கிய ஊழியர் போராட்டம் தற்போது அரசியலா உருவெடுத்துள்ளது. பைடனும் , டிரம்ப்பும் ஊழியர் குழுக்களின் ஆதரவைப் பெறுவதில் முனைப்பாக உள்ளனர்.

இந்நிலையில் 40 விழுக்காடு வரை ஊதிய உயர்வு வேண்டும் என்று ஊழியர்கள் கோரும் நிலையில் தற்போதைய அதிபர் பைடன் அதனை ஆதரிக்கிறார். அதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை அமெரிக்க அதிபர் ஒருவர் சந்தித்துள்ளமை இதுவே முதன்முறை ஆகும்.