உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை அணி சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அணியின் தலைவராக தசுன் சானக்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், துணைத் தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கமைய தசுன் சானக்க தலைமையிலான இலங்கை அணியில் குசல் மெந்திஸ், குசல் ஜனித் பெரேரா, திமுத் கருணாரத்ன பெத்தும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, துனித் வெல்லாலகே, கசுன் ராஜித, மதிஷ பத்திரன, லஹிரு குமார மற்றும் தில்ஷான் மதுஷங்க ஆகிய வீரர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை உடல் தகுதி அடிப்படையில் பெயரிடப்பட்ட வீரர்களின் பட்டியலில் வனிந்து ஹசரங்க, மகேஷ் தீக்ஷனா மற்றும் தில்ஷான் மதுஷங்க ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அணியுடன் மேலதிக வீரர்களாக சாமிக்க கருணாரத்ன மற்றும் துஷான் ஹேமந்த நாளை இந்தியா பயணிக்கவுள்ளனர்.