காதல் உறவை பேணுவதற்காக பொலிஸாரின் அனுமதி பெறும் விண்ணப்ப படிவம் உள்ளதாக குறிப்பிட்டு அந்த விண்ணப்ப படிவத்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மேலும் காதல் உறவைப் பேணுவதற்கு பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் விளக்கமளிக்கையில்,
பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
இந்தத் தகவல் முற்றிலும் தவறானது எனவும் அத்தகைய அனுமதி விண்ணப்பம் எதுவும் இல்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், இது தொடர்பான குறிப்பு கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பேஸ்புக்கில் பரவி வரும் ஒரு குறிப்பேடு எனவும் இந்த நாட்களில் மீண்டும் பரிமாற்றம் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஹோமாகம நகரிலுள்ள தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான பூங்காவில் மூடப்பட்ட சிறிய அறைகளில் பொழுதைக் கழித்த இளையவர்களை தேடி சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
விண்ணப்ப படிவம்
இந்நிலையில் இந்த விண்ணப்ப படிவம் மீண்டும் பரப்பப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை வயதுடைய மாணவர்கள் பூங்காவிற்கு செல்லும் போது மூடப்பட்ட அறைகளில் அநாகரீகமாக நடந்து கொள்வதாக அப்பகுதி மக்கள் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து ஹோமாகம பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளதாகவும், இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.