நினைவேந்தலுக்கு தடை கோரி கொழும்பில் இருந்து வந்தவர்களின் மனு யாழில் நிராகரிப்பு!

0
205

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை கோரி சட்டமா அதிபர் திணைக்களத்தின் விசேட குழுவினால், யாழ்.நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளை அடுத்து நினைவேந்தலுக்கு தடை விதிக்க நீதிமன்று மறுத்துள்ளது.

கொழும்பில் இருந்து ஹெலி மூலம் யாழ்ப்பாணத்திற்கு நேற்று வியாழக்கிழமை வருகை தந்த சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதானிகள் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்க கோரி, மனுவை தாக்கல் செய்தனர்.

அவர்களின் மனு மீதான விசாரணைகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மன்று நினைவேந்தலுக்கு தடை விதிக்க மறுத்துள்ளது.