அடுத்த சூரிய சந்திர கிரகணம்; அதிர்ஷ்டம் பெற உள்ள ராசிகள்..

0
140

ஒக்டோபர் 14 ஆம் திகதி சனிக்கிழமை, மகாளய அமாவாசை அன்று சூரிய கிரகணமும், பின்னர் 15 நாட்கள் கழித்து அதாவது ஒக்டோபர் 28 ஆம் திகதி பௌர்ணமி அன்று சந்திர கிரகணமும் ஏற்பட உள்ளது.

இந்த கிரகணங்களின் தாக்கத்தால் ஒக்டோபர் மாதத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு நல்ல தாக்கம் ஏற்படும் என தெரிந்து கொள்வோம்.

கிரகண நேரங்கள்

ஒக்டோபர் 14ம் திகதி இரவு 8.34 மணி தொடங்கி நள்ளிரவு 2.25 மணி வரை சூரிய கிரகணம் நடக்க உள்ளது.

ஒக்டோபர் 28ம் திகதி ஏற்படும் சந்திர கிரகணம் இரவு 11.31 மணிக்கு தொடங்கி 29ம் திகதி அதிகாலை 3.56 மணி வரை நீடிக்க உள்ளது.

அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசி

மிதுனம் ஜோதிடத்தின் கணக்கீடுகளின்படி, இரண்டு கிரகணங்களாலும் மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும்.

சூரிய, சந்திர கிரகணம் 2023 : அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெற உள்ள ராசிகள் | Solar And Lunar Eclipse In October 2023

இதன் காரணமாக உங்களுக்கு நிதி ஆதாயங்கள் பெறக்கூடிய சிறந்த வாய்ப்புகளைப் பெற்றிடுவீர்கள். உங்களின் தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றத்தை அடைந்திட முடியும்.

பணியிடத்தில் சிறப்பாக வேலையை முடிப்பதோடு, மரியாதையும், பெரிய பதவி உயர்வையும் பெற்றிடலாம். உங்களின் நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

சிம்ம ராசி

இந்த சூரிய கிரகணத்தின் காரணமாக, அதன் தாக்கம் சிம்ம ராசிக்கு மிகவும் சிறப்பான பலன்களை தருவதாக இருக்கும். உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும்.

சூரிய, சந்திர கிரகணம் 2023 : அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெற உள்ள ராசிகள் | Solar And Lunar Eclipse In October 2023

உங்களின் பொறுப்புகள் கூடும் என்றாலும் அது உங்களுக்கு முன்னேற்றத்தை தரக்கூடியதாக இருக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல இலாபம் கிடைக்கும். பொருளாதார நிலை வலுப்படும். துலாம் ராசியினருக்கு ஒக்டோபர் மாதத்தில் நடக்க உள்ள கிரகணங்களின் காரணமாக பல வகையில்  நற்பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்களின் எல்லா வேலைகளும் வேகமாக நிறைவேற்ற முடியும்.

உங்களின் தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. சுப செய்திகளும், சுப செலவுகளும் ஏற்படலாம்.