ஜனாதிபதி ரணிலுக்கும் உலக வங்கியின் தலைவருக்கும் இடையில் விசேட சந்திப்பு

0
58

நியூயோர்க்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் உலக வங்கியின் தலைவர் அஜய் பங்காவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு நேற்று (18.09.2023) நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.

உலக வங்கி

வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக், அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மகிந்த சமரசிங்க் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி மொஹான் பீரிஸ் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அனுசரணையில் ஆரம்பமான நிலையான அபிவிருத்திக்கான இரண்டு நாள் உச்சிமாநாட்டுக்கு புறம்பாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

New World Bank chief